குளிக்கும் ஆந்தைகள்; குரங்குகளுக்கு ஐஸ்கிரீம்

குளிக்கும் ஆந்தைகள்; குரங்குகளுக்கு ஐஸ்கிரீம்

1 mins read
9a8ea5ab-5968-4686-926e-a7349f5b09a2
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கடும் வெப்பம். அங்குள்ள ஃபீனிக்ஸ் விலங்குகாட்சி சாலையில் உள்ள பிராணிகளுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கப்படுகிறது. குளிர்ந்த நீரால் அவை குளிப்பாட்டப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஃபீனிக்ஸ்: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கடும் வெப்பம் வீசுகிறது. அங்குள்ள ஃபீனிக்ஸ் விலங்குகாட்சிசாலையில் தொடர்ந்து 22 நாட்களாக 43 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் வெப்பநிலை நிலவுகிறது.

விலங்குகாட்சிசாலையில் உள்ள பிராணிகளுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கப்படுகிறது; அவை குளிர்ந்த நீரால் குளிப்பாட்டப்படுகின்றன.

ஆந்தைகள் குளிர்ந்த நீரால் குளிப்பாட்டப்படும்போது கும்மாளம் போடுகின்றன.

குரங்குக் குட்டிகளுக்கு ஐஸ்கிரீம் போன்ற குளிர் உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை ஆசையுடன் வாங்கி சுவைத்து குரங்குக் குட்டிகள் தாவித்தாவி விளையாடி மகிழ்கின்றன.

குதிரைகள் அதிக வெப்பத்தை தாங்க முடியாது என்பதால் அவற்றுக்கும் குளிர் உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

குட்டைகள், சேற்றுநீர் குளங்கள், குளிரூட்டிச் சாதனக் கூடங்கள் பலவும் அங்கு உருவாக்கப்பட்டு உள்ளன. பெரும் பெரும் காற்றாடிகளும் இயக்கப்படுகின்றன.

இவை எல்லாம் மிகவும் முக்கியமானவை; தேவைப்படுபவை என்று விலங்குகாட்சி சாலை பொறுப்பு அதிகாரி லிஸ்சி நியூமேன் கூறினார்.

ஆமைகள், காண்டாமிருகங்கள் உள்ளிட்ட விலங்குகள் குளிரூட்டி சாதனக்கூடங்களில் இருந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்