சிட்னியில் காரில் இருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு

சிட்னியில் காரில் இருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு

1 mins read
a3ea7375-a841-461b-9197-246fefd7fb51
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: சிட்னியில் கார் நிறுத்துமிடங்களில் காரில் இருந்தவர்கள் மீது ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் மூவர் காயம் அடைந்தனர் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு சிட்னியில் கிரீனேக்கர் புறநகர்ப்பகுதியில் ஞாயிறு காலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்தச் சம்பவத்தில் காரில் இருந்த 25 வயது நபரும் மற்றொருவரும் காயம் அடைந்தனர். மற்றொரு கார் நிறுத்துமிடத்தில் வாகனத்தில் இருந்த 19 வயது பதின்ம வயது பெண் காயம் அடைந்தார்.

மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரு ஆண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை தெரிவித்தது.

துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனத்தில் தப்பிச் சென்றவனை காவல்துறை தேடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்