தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: தள்ளாடியவெஸ்ட் இண்டீஸ்

1 mins read
95ccf3ec-f7a2-49c6-beb5-be755bae85ba
வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட்டை வீழ்த்தியதை ரவிச்சந்திரன் அஸ்வின் (வலம்) சக வீரருடன் கொண்டாடுகிறார். - படம்: ஏஎஃப்பி

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட், மெக்கன்சி ஜோடி இந்திய பந்து வீச்சை திறமையாகச் சமாளித்து ஓட்டங்களை சேர்த்தனர்.

சனிக்கிழமை மழைக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தது. பிராத்வைட் பொறுமையாக ஆடி அரை சதத்தைப் பூர்த்தி செய்து 75 ஓட்டங்களை எடுத்தார். இது, பிராத்வைட்டின் 29வது அரை சதமாகும். முகேஷ் குமார் வேகத்தில் 32 ஓட்டங்களுடன் மெக்கன்சி ஆட்டமிழந்தார்.

அஸ்வின் சுழற்பந்தில் பிராத்வைட் வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது.

இந்தியா சார்பில் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் அஷ்வின், முகேஷ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா முதல் இன்னிங்சில் 438 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

இந்த நிலையில் 4வது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்து நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்