கடத்தப்பட்ட பெண்ணின் ‘எனக்கு உதவுங்கள்’ எனும் குறிப்பு மீட்க உதவியது

கடத்தப்பட்ட பெண்ணின் ‘எனக்கு உதவுங்கள்’ எனும் குறிப்பு மீட்க உதவியது

1 mins read
b36beb11-f0ea-45ad-9ab9-459012b1ed22
கடத்தப்பட்ட பெண் எழுதிய குறிப்பு - @901Lulu

கடத்தப்பட்ட பெண்ணின் ‘எனக்கு உதவுங்கள்’ எனும் குறிப்பு அவரைக் காப்பாற்ற உதவியிருக்கிறது.

ஜூலை 6ஆம் தேதி பெற்றோருக்குத் தெரிவிக்காமல் 13 வயது சிறுமி, அண்மையில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய நண்பரைச் சந்திக்கச் சென்றார்.

சான் ஆன்டோனியாவில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்துக்கு அவர் நடந்து சென்றார். அப்போது அங்கு காரில் வந்த ஸ்டீபன் ராபர்ட் சப்லான், 61, என்பவர் சிறுமியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரில் ஏற வைத்துள்ளார்.

பின்னர் இரண்டு நாள்களாக சிறுமியிடம் அவர் பாலியல் செயல்களில் ஈடுபட்டார்.

டெக்சாஸிலிருந்து நியூ மெக்சிகோ, அரிசோனா வழியாக சப்லான் கலிபோர்னியா அடைந்தார்.

ஜூலை 9ஆம் தேதி கலிபோர்னியாவின் லாங் பீச்சில் உள்ள சலவை இயந்திர இடத்திற்கு அருகே அவர் காரை நிறுத்தினார்.

சப்லான் காரிலிருந்து இறங்கிச் சென்றதும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமி ‘எனக்கு உதவுங்கள்’ என்று ஒரு தாளில் எழுதி காரிலிருந்து காட்டினார்.

இதைப் பார்த்த வழிபோக்கர் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த அமலாக்க அதிகாரிகள் காரை சோதனையிட்டு சிறுமியை மீட்டனர்.

காரிலிருந்து துப்பாக்கி, கைவிலங்கு போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக லாங் பீச் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் 61 வயது சப்லான் சிறுமியைக் கடத்தியதாகவும் வயது வராத பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது என்று உள்ளூர் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்