பாப்புவா நியூ கினிக்கு கடலோரக் காவற்படைக் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

பாப்புவா நியூ கினிக்கு கடலோரக் காவற்படைக் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

1 mins read
e29dc55f-d3b8-400b-bc55-54c55580060f
பாப்புவா நியூ கினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே (இடது), அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இருவரும் ஜூலை 27ஆம் தேதி போர்ட் மோர்ஸ்பியில் சந்தித்தனர். - படம்: ஏஎஃப்பி

போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் அமெரிக்கக் கடலோரக் காவற்படைக் கப்பல் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

தென்பசிபிக் வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பில் சீனா கடுமையான போட்டியைக் கொடுத்துவரும் நிலையில், வாஷிங்டன் பாப்புவா நியூ கினியில் தனது ராணுவ இருப்பை மேம்படுத்த விரும்புகிறது.

ஆகஸ்டு மாதம் அமெரிக்கக் கடலோரக் காவற்படைக் கப்பல் பாப்புவா நியூ கினியில் இருக்கும் என்று திரு ஆஸ்டின் கூறினார்.

இரு நாடுகளும் அண்மையில் தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தென் பசிபிக் வட்டாரத்தில் முக்கிய நாடான பாப்புவா நியூ கினியில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

பாப்புவா நியூ கினியில் சட்டவிரோத மீன்பிடிப்பு, கடத்தல் போன்றவற்றைத் தடுக்கவும், கடல்துறை வளங்கள் திருடு போகாமல் பாதுகாக்கவும் அமெரிக்கக் கப்பல் உதவும் என்று திரு ஆஸ்டின் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்