தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யாவிடம் காட்டிய வடகொரியா

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காட்சி ஒன்றில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரிடம் பெருமையுடன் காட்டியுள்ளார்.

அண்டை நாடுகளான வடகொரியாவும் ரஷ்யாவும் வியாழக்கிழமை உறவை வலுப்படுத்த உறுதி தெரிவித்ததாகவும் வடகொரிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

வடகொரியாவில் ‘வெற்றி நாளாக’ கொண்டாடப்படும் கொரியப் போரின் 70வது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய அமைச்சர் செர்கெய் ஷோய்குவும் சீனாவின் உச்ச ஆட்சி மன்ற உறுப்பினரும் இவ்வாரம் வடகொரியாவுக்கு வந்திருந்தனர்.

அப்போதுதான் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை திரு கிம் அவர்களுக்கு காட்டினார்.

ரஷ்யா, சீனா ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட ஐநா பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களின்கீழ் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை வடகொரியா கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தது.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றுபட்டு இருப்பதை கண்காட்சி காட்டியது.

சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் வடகொரியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. அந்த வகையில் திரு செர்கெய் ஷோய்குவின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

வட கொரியாவைப் பொறுத்தவரை, ரஷ்ய, சீன பிரதிநிதிகளின் வருகை, கொள்ளைநோய்க்குப் பிறகு அதன் எல்லைகள் உலகிற்கு திறக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கொடுத்தனுப்பிய கடிதத்தை திரு கிம்மிடம் திரு ஷோய்கு ஒப்படைத்தார்.

இதனைப் பெற்றுக் கொண்ட திரு கிம், திரு ஷோய்கு தலைமையில் ராணுவப் பேராளர் குழுவை அனுப்பிய திரு புட்டினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

திரு ஷோய்குவின் வருகை வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உத்திபூர்வ, பாரம்பரிய இரு நாட்டு உறவை மேலும் ஆழப்படுத்தியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ரஷ்யாவும் அந்நாட்டின் ராணுவமும், மக்களும் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் என்று திரு கிம் மீண்டும் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார் என்று வட கொரிய ஊடகங்கள் தெரிவித்தன.

கண்காட்சியில் புதிய ஆயுதங்கள், ராணுவ உபகரணங்களை திரு ஷோய்குவுக்கு திரு கிம் காட்டியதாக கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!