மலேசியாவும் ஹாங்காங்கும் சிங்கப்பூர் எல்லையில் பொருளியல் நடுவம் அமைக்கத் திட்டம்

மலேசியாவும் ஹாங்காங்கும் சிங்கப்பூர் எல்லையில் பொருளியல் நடுவம் அமைக்கத் திட்டம்

1 mins read
fb615683-de2b-4499-933c-0359838e1f96
ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ (நடுவில்), மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் (இடது) இருவரும் கோலாலம்பூரில் நடைபெற்ற ‘மலேசியா-ஹாங்காங் வெற்றிப் பங்காளித்துவம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி

புத்ராஜெயா: ஜோகூர் மாநிலத்தில் சிங்கப்பூர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மலேசியாவும் ஹாங்காங்கும் இணைந்து பொருளியல் நடுவம் ஒன்றை உருவாக்க உள்ளன.

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் இணைப்பு ரயில் பாதைக்கான திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில் அந்த வட்டாரத்தை ஒட்டிய நிலப் பகுதியை மேம்பட்ட வகையில் பயன்படுத்திக்கொள்ள கோலாலம்பூர் திட்டமிடுகிறது.

புக்கிட் சாகாரில் ஆறு ஏக்கர் நிலப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதன் தொடர்பில் மலேசியாவின் எம்ஆர்டி கார்ப் நிறுவனமும் ஹாங்காங்கின் எம்டிஆர் கார்ப் நிறுவனமும் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயின் மலேசியப் பயணத்தின் ஓர் அங்கமாக, வெள்ளிக்கிழமை அந்த இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.

உள்ளூர், அனைத்துலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் பகுதியாகப் புதிய பொருளியல் நடுவம் உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர்-மலேசிய எல்லையில் இருந்து 1 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் 3 பில்லியன் ரிங்கிட் ($870 மில்லியன்) பொருளியல் நடுவம் கட்டப்படும். அந்த இடத்தில்தான் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைத் திட்டத்தின்(ஆர்டிஎஸ்)கீழ், புக்கிட் சாகார் முனையம் அமையவிருக்கிறது.

ஆர்டிஎஸ் திட்டம் 2026ஆம் ஆண்டு சேவை வழங்கத் தொடங்கும்போது இரு வழிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பேர் வரை பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்