ஏபெக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஹாங்காங் நிர்வாகிக்கு அழைப்பு இராது

ஏபெக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஹாங்காங் நிர்வாகிக்கு அழைப்பு இராது

1 mins read
4b501bd2-1a0f-42d9-9d6a-cc29134e82dc
ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியான ஜான் லீக்கு அமெரிக்கா 2020ல் தடை விதித்தது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வரும் நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபெக்) உச்சநிலைக் கூட்டம் நடக்கிறது.

அதில் கலந்துகொள்ள ஹாங்காங் தலைமை நிர்வாகியான ஜான் லீயை அமெரிக்கா அழைக்காது.

ஜான் லீ அமெரிக்காவின் தடைகளை எதிர்நோக்குகிறார்.

இந்த விவகாரங்களை அமெரிக்காவின் நாடாளுமன்றப் பிரமுகர்கள் இருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

அமெரிக்கா, 2023 ஏபெக் உச்சநிலைக் கூட்டத்தை நடத்துகிறது. ஏபெக் அமைப்பில் ஹாங்காங் உறுப்பியத்தைப் பெற்றுள்ளது.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியாக இப்போது இருக்கும் ஜான் லீ, 2020ல் ஹாங்காங்கின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார்.

அப்போது ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்தது. அந்தச் சட்டத்தைக் கொடூரமான ஒன்று என்று அமெரிக்கா கருதுகிறது.

அந்த தேசிய சட்டத்தை அமல்படுத்தியதில் பங்கு வகித்ததற்காக ஜான் லீக்கு அமெரிக்கா 2020ல் தடை விதித்தது.

குறிப்புச் சொற்கள்