தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடா காட்டுத் தீ: மேலும் ஒரு தீயணைப்பாளர் பலி

1 mins read
8eacef2a-bdb9-411e-acd5-3af5e63779c3
கனடாவில் காட்டுத் தீ இந்த ஆண்டில் சுமார் 12 மில்லியன் ஹெக்டர் காட்டுப் பகுதியை நாசப்படுத்திவிட்டது. - படம்: ஏஎஃப்பி

மான்ட்ரியல்: கடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ இன்னமும் அடங்கிய பாடில்லை. தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் பாடாத பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தீயணைப்பாளர் ஒருவர் மாண்டுவிட்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் சனிக்கிழமை அறிவித்தார். அவரையும் சேர்த்து இத்துடன் தீயணைப்பாளர்கள் மூவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“மேலும் ஒருவர் மரணமடைந்த செய்தி கேட்டு மனம் உடைந்துவிட்டேன், முன்களப் பணியாளராக தொண்டு செய்த அவரின் குடும்பத்தார், சக ஊழியர்களின் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்,” என்று முதல்வர் டேவிட் ஈபே அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாதத்தில் ஏற்கெனவே தீயணைப்பாளர்கள் இருவர் மாண்டு விட்டனர். மேற்கு கனடாவில் அல்பெர்டா பகுதியில் ஜூலை 19 ஆம் தேதி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதன் விமானி கொல்லப்பட்டார்.

கனடாவில் காட்டுத் தீ இந்த ஆண்டில் சுமார் 12 மில்லியன் ஹெக்டர் காட்டுப் பகுதியை நாசப்படுத்திவிட்டது. இந்தப் பரப்பளவு, தென்கொரியா அல்லது கியூபா நாட்டின் பரப்பளவைவிட அதிகம். இந்த ஆண்டு காட்டுத் தீ பிரச்சினை மோசமாக இருக்கிறது என்று திரு ஈபே குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீ