தைப்பே: கானுன் சூறாவளி காரணமாக தைவான் தலைநகர் தைப்பே உட்பட வடக்குப்பகுதிகளில் உள்ள பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
கானுன் சூறாவளியால் தைவானில் வெள்ளம், கடுமையான காற்று வீசக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
தைவான் வானிலை ஆய்வகம் கானுன் சூறாவளியை இரண்டாம் நிலையில் உள்ள கடுமையான சூறாவளி என்று வகைப்படுத்தியுள்ளது.
தைவானின் வடகிழக்கு கரையை கானுன் சூறாவளி மணிக்கு 209 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் காரணமாக கிட்டத்தட்ட 30 அனைத்துலக, உள்ளூர் விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டன. படகுச்சேவைகளும் வியாழக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கானுன் சூறவாளி தாக்கியதால் புதன்கிழமையன்று ஜப்பானின் ஒக்கினாவா மாநிலத்தில் 200,000க்கு அதிகமான வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. ஒருவர் மாண்டார்.
ஒக்கினாவாவின் சில இடங்களில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.