தென் கொரியாவையும் தென் அமெரிக்காவையும் வாட்டும் வெளியில்

தென் கொரியாவையும் தென் அமெரிக்காவையும் வாட்டும் வெளியில்

1 mins read
5990c985-ca3b-4efe-97ad-9a7300843737
சாரண சாரணியர் முகாமில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். முகாம் நடந்தபோது வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருந்தது. - படம்: இபிஏ

சோல்: கொரிய தீபகற்பத்தை வெயில் வாட்டிவதைத்து வருகிறது. இந்நிலையில் தென்கொரியாவின் ஜியோன்புக் மாநிலத்தில் உலக சாரண சாரணியர் முகாம் நடந்து வருகிறது. அதில் உலக நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 43,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் முகாமில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு புதன்கிழமை தெரிவித்தது. 

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக மருத்து உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

முகாம் நடந்தபோது வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருந்தது. 

பாதிக்கப்பட்ட சாரண சாரணிய மாணவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், பங்ளாதே‌ஷ், கொலம்பியா, போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. முகாம் 12 நாள்கள் நடக்கிறது.

தென்கொரியாவில் வெப்பம் தொடர்பாக ஆக உயரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் வெப்பம் தொடர்பாக 21 பேர் மாண்டனர். 

வடகொரியாவில் வரும் நாள்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குளிர் காலமாக இருக்க வேண்டிய சிலி, ஆர்ஜெண்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் முன்னேப்போதும் இல்லாத அளவில் வெளியில் பதிவாகியுள்ளது. 

செவ்வாய்கிழமை சிலியில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகப் பதிவானது. 

ஆர்ஜெண்டினா, உருகுவேயிலும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகப் பதிவானது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் இந்நாடுகளில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசுக்கு குறைவாகதான் இருக்கும். 

குறிப்புச் சொற்கள்