திருடப்பட்ட சிலைகளைத் திருப்பி கொடுத்த ஆஸ்திரேலியா

திருடப்பட்ட சிலைகளைத் திருப்பி கொடுத்த ஆஸ்திரேலியா

1 mins read
bb20f5c6-ceec-41a8-b665-a9f93ab557eb
சிலைகள் ஒன்பது, பத்து நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்றும் அவை வெண்கலத்திலானது என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஆஸ்திரேலிய தேசிய அரும்பொருளகம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தேசிய அரும்பொருளகம் கம்போடியாவிடம் மூன்று சிலைகளை ஒப்படைக்கவுள்ளது.

அந்த மூன்று சிலைகளும் ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சிலைகள் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்றும் அவை வெண்கலத்திலானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிலைகள் 2011ஆம் ஆண்டு 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு பிரிட்டனைச் சேர்ந்த டங்லஸ் லாட்ச்ஃபோர்டிடம் விற்கப்பட்டது.  அவர் சட்டவிரோதமாக சிலைகளைக் கடத்தும் செயல்களில் ஈடுபட்டதாக 2020ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

திருடப்பட்ட சிலைகளைத் திருப்பிக்கொடுத்ததற்கு கம்போடியா நன்றி தெரிவித்துக்கொண்டது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்