ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்திய பெண் மரணம்

1 mins read
bd515d21-1b1b-460a-8d47-065da7d70ce2
ஏஷ்லி சம்மர்ஸ் கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் சுமார் 1.89 லிட்டர் தண்ணீர் அருந்தியதாகக் கூறப்படுகிறது. - படம்: தமிழ் முரசு

இண்டியானா: ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தியதால் பாதிப்பு ஏற்பட்டு 35 வயது அமெரிக்கப் பெண் மரணம் அடைந்ததாக அமெரிக்க ஊடகம் தெரிவித்தது.

கடந்த மாதம் 4ஆம் தேதியன்று தமது கணவர், இரு மகள்களுடன் அமெரிக்காவில் உள்ள இண்டியானா லேக் ஃப்ரீமனுக்கு திருவாட்டி ஏஷ்லி சம்மர்ஸ் சுற்றுலா மேற்கொண்டார்.

தாகமாக இருந்ததால் திருவாட்டி சம்மர்ஸ் ஏறத்தாழ 20 நிமிடங்களில் சுமார் 1.89 லிட்டர் குடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு நாளுக்குத் தேவையான தண்ணீர் அளவு என்று அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்திடம் திருவாட்டி சம்மர்சின் சகோதரர் கூறினார்.

திருவாட்டி சம்மர்ஸ் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தியதால் அது நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் பிளேக் ஃபுரோபர்க் கூறினார்.

குறிப்புச் சொற்கள்