கிரைமியா: ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவில் ரஷ்யத் தலைநிலத்துடன் இணைக்கும் பாலத்துக்கு அருகே சரமாரியாக வெடிப்புச்சத்தம் கேட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிரைமியா பாலத்துக்கு அருகே கேட்ட வெடிப்புச்சத்தம் ரஷ்ய பீரங்கிகள் மீதான உக்ரேனிய வானூர்திகளின் தாக்குதலாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்கில் உள்ள ரஷ்ய கடல் மீட்பு சேவை உடனடியாக பீரங்கிகளுக்கு உதவ இழுவைப்படகுகளை அனுப்பிவைத்தது. பீரங்கிகள் சேதமடைந்ததால் சொந்தமாக இயங்க முடியவில்லை.
“தெற்குப் பகுதியில் உள்ள பீரங்கிகள் மட்டும் சேதமடைந்துள்ளன,” என்று மீட்பு நிலையத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
நோவோரோசிஸ்கில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்தை இலக்காக வைத்து உக்ரேனிய கடற்படை வானூர்திகள் தாக்கின. இதில் ரஷ்ய போர்க்கப்பலுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது.
உக்ரேன், முதல் முறையாக தனது கடற்கரையிலிருந்து வெளியிடத்தில் நடத்திய தாக்குதல் அதன் வலிமையைக் காட்டும் வகையில் அமைந்தது.
2014ஆம் ஆண்டில் மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரைமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் அண்மைய தாக்குதலால் பாலத்திற்கு சேதமில்லை என்று கூறினர்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து 17 மாதங்கள் ஆன நிலையில் இந்தப் பாலம் இரண்டு முறை கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக, ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரேன் வெளிப்படையாக விமர்சிப்பதில்லை. அந்த வகையில் இம்முறையும் அது வாய் திறக்கவில்லை.
உக்ரேன் தாக்குதலில் கிரைமியா-ரஷ்யா பாலத்திற்கு சேதம் ஏற்படவில்லையென்றாலும் போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.
நேரடித் தாக்குதலுக்கு பாலம் இலக்காகவில்லை என்று கிரைமியா ஆளுநர் ஒலெக் கிரியுச்கோவ்வும் உறுதிப்படுத்தினார்.

