கம்போடியாவின் புதிய பிரதமராக ஹுன் மானெட் நியமனம்

நோம் பென்: கம்போடியாவின் புதிய பிரதமராக ஹுன் மானெட்டை கம்போடியப் பேரரசர் நியமினம் செய்துள்ளார்.

அவரை நியமிப்பதற்கான இசைவை பிரதமரும் ஹுன் மானெட்டின் தந்தையும் ஹுன் சென் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

ஹுன் மானெட் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு ஹுன் சென்னின் 40 ஆண்டுகால பிரதமர் பதவி முடிவுக்கு வருகிறது. உலகளவில் நீண்டகாலம் அரசாங்கத் தலைமைப் பதவியில் இருந்தவர்களில் ஹுன் சென்னும் ஒருவர்.

ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியானதும் தமது பதவி துறப்பை திரு ஹுன் சென் வெளியிட்டார். பிரதமர் பதவிப் பொறுப்பை தமது மூத்த மகன் ஹுன் மானெட்டிடம் ஒப்படைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

மொத்தம் 125 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் ஹுன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி 120 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சிகளின் வசம் ஐந்து இடங்கள் மட்டுமே சென்றன.

இருப்பினும், மக்களின் செல்வாக்கு பெற்ற கேண்டல்லைட் கட்சியை முடக்கி ஒருசார்பாக நடத்தப்பட்ட தேர்தல் இது என்று பரவலாகக் குறைகூறப்பட்டது.

தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படவில்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிருப்தி தெரிவித்தன.

ஆனால், திரு ஹுன் சென் அத்தகைய குறைகூறல்களைப் புறந்தள்ளிவிட்டு மகனுக்கு மகுடம் சூட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்ற கம்போடியப் பேரரசர் நோரோடோன் சிஹாமோனி, அரசவை அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டின் 7வது நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கம்போடியப் பேரரசின் பிரதமராக திரு ஹுன் மானெட்டை நியமிக்கிறேன்,” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, 45 வயதாகும் ஹுன் மானெட்டும் அவரது அமைச்சரவையும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும்.

ஹுன் மானெட்டின் அமைச்சரவை பெரும்பாலும் இளையர்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமது மகனின் ஆட்சியில் தாம் தலையிடப்போவதில்லை என்று திரு ஹுன் சென் உறுதி அளித்துள்ளார். அதேநேரம், தமது மகன் பிரதமர் பொறுப்பில் சரிவர செயல்படவில்லை எனில் அந்தப் பதவியைப் பறிக்க தாம் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

கம்போடியாவில் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள பிரதமர் ஹுன் மானெட்டுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூருக்கும் கம்போடியாவுக்கும் இடையில் நீண்கால நட்பு உறவுகள் உள்ளன. 2018ஆம் ஆண்டு திரு ஹுன் மானெட் வருகை அளித்த பின்னர் அந்த உறவுகள் வளர்ந்துள்ளன,” என்று திரு லீ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!