2023 இறுதிவரை ஆட்சேர்ப்பைத் தொடரும் விமான நிறுவனம்

1 mins read
24a101d1-0996-42e6-8f27-eaf76aeb24f6
இவ்வாண்டில் ஆறு கண்டங்களில் 340 நகரங்களில் ஆட்சேர்ப்பு நிகழ்வுகளை நடத்தியுள்ளது எமிரேட்ஸ் நிறுவனம். - படம்: புளூம்பெர்க்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்தில் பணிபுரியும் விமானச் சிப்பந்திகளின் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டிவிட்டது.

இவ்வாண்டில் ஆறு கண்டங்களில் 340 நகரங்களில் ஆட்சேர்ப்பு நிகழ்வுகளை நடத்தியுள்ள எமிரேட்ஸ் நிறுவனம், 2023 இறுதிவரை அது தொடரும் என்று அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவரின் சராசரி மாத ஊதியம் 10,388 திர்ஹம் (S$3,800, ரூ.234,000).

இப்போதைக்கு 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமிரேட்ஸ் நிறுவன ஊழியர்களாகப் பணியாற்றுவதாக ‘கல்ஃப் நியூஸ்’ குறிப்பிட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமானச் சிப்பந்திகளாகப் பணியாற்ற ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். வேறு மொழிகள் தெரிந்திருப்பின் கூடுதல் சாதகம்.

அந்நிறுவனத்தில் புதிதாக விமானச் சிப்பந்திகளாகச் சேர்வோருக்கு எட்டு வாரங்களுக்குத் தீவிரப் பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்