ஆறு மலேசிய மாநிலங்களில் தேர்தல்: மக்கள் வாக்களிப்பு

1 mins read
3b68f40e-8676-4c3d-bcba-d782bf610e21
245 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்களிக்க கிட்டத்தட்ட 9.7 மில்லியன் பேர் தகுதிபெற்றுள்ளனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆறு மாநில அரசாங்கங்களைத் தேர்வுசெய்ய மலேசியர்கள் சனிக்கிழமை வாக்களிக்கின்றனர். இரண்டு வாரங்கள் நீடித்த காரசாரமான பிரசாரத்தில், தேர்தல் வாக்குறுதி அளிப்பதைவிட அரசியல் எதிரிகளை விமர்சிப்பதே மேலோங்கியது.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் 245 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்களிக்க கிட்டத்தட்ட 9.7 மில்லியன் பேர் தகுதிபெற்றுள்ளனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 6 மணிக்கு நிறைவுபெறும்.

வாக்களிப்புக்குப் பிறகு, இப்போதுள்ள அரசியல் நிலவரத்தில் மாற்றம் எதுவும் இருக்காது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பங்காளித்துவக் கூட்டணியான தேசிய முன்னணியும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனல் கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஆளும் எனவும் கணிக்கப்படுகிறது.

மலேசியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் ஆறு மாநிலத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். பிரதமர் அன்வாரின் ஆட்சி மீதான பொது வாக்கெடுப்பாகவும் இது கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்