மற்றொரு சூறாவளிக்குத் தயாராகும் ஜப்பான்; விமான சேவைகள் ரத்து

மற்றொரு சூறாவளிக்குத் தயாராகும் ஜப்பான்; விமான சேவைகள் ரத்து

1 mins read
0d30efb3-f8b2-46e7-98af-e6f1024d0187
ஜப்பானின் முக்கிய தீவான ஹொன்ஷூவை லான் புயல் நெருங்கி வருவதால் உயரமான பேரலைகள் கரை மீது மோதுகின்றன. - படம்: ஏஎஃப்பி

ஜப்பான் ஒரு வார காலத்தில் இரண்டாவது சூறாவளிக்குத் தயாராகி வருகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

‘லான்’ சூறாவளி செவ்வாயன்று மத்திய ஜப்பானில் நாட்டின் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியான ஒசாகாவுக்கு அருகே, ஹொன்ஷுவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கனமழை, மண்சரிவு, பலத்த காற்று ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வகாயாமா மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் வசிக்கும் 26,000 முதியோர்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒசாகாவில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஜப்பான் தீம் பார்க் செவ்வாய்க்கிழமை மூடப்படும்.

ஜப்பானின் இரு பெரிய விமான நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ் (ஜேஏஎல்), ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியவை விமான சேவை தாமதங்கள் இருக்கும் எனக் கூறியுள்ளன. ஜேஏஎல் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 250க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது.

ஜப்பானில் ஆண்டு விடுமுறை முடிந்து மில்லியன் கணக்கானோர் தத்தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வேளை என்பதால், பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

‘கானுன் சூறாவளியினால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை சென்ற புதன்கிழமை தென் ஜப்பானை தாக்கியது.

குறிப்புச் சொற்கள்