ஜகார்த்தா: ஜகார்த்தாவில் முகக் கவசங்களுடன் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் பல குடியிருப்பாளர்களுக்குத் தாங்கள் இன்னமும் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராகப் போராடிவருவது போல் உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர், உலகின் ஆக மோசமான காற்றுத் தூய்மைக்கேடு நிலவும் நகரமாக அறிவிக்கப்பட்டது ஜகார்த்தா.
சுவிஸ் காற்றுத் தரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐகியூஏர்’ அந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து இந்தோனீசியத் தலைநகரில் உள்ள அதிகாரிகள் வாகனங்களிலிருந்து வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.