நிதி நெருக்கடியில் சீனாவின்ஆகப்பெரிய நிதி நிறுவனம்

நிதி நெருக்கடியில் சீனாவின்ஆகப்பெரிய நிதி நிறுவனம்

1 mins read
f1e42239-4a92-40bb-bcc5-7ddbd8ed8eca
ஸோங்ஷி எண்டர்பிரைஸ் குரூப் நிதி நிறுவனம், 1 டிரில்லியன் யுவானுக்கும் (S$188 பில்லியன்) அதிக மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கிறது. - படம்: புளூம்பர்க்

ஷங்காய்: சீனாவின் ஆகப் பெரிய தனியார் சொத்து நிர்வாக நிதி நிறுவனமான ஸோங்ஷி எண்டர்பிரைஸ் குரூப், பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்குகிறது.

அந்த நெருக்கடி, நிதித்துறையில் அச்சத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. ஸோங்ஷி எண்டர்பிரைஸ் தனது கடன் அடைப்பு ஏற்பாடுகளைத் திருத்தி அமைக்கிறது.

அந்த நிறுவனம், தனது வரவுசெலவு அறிக்கையைத் தணிக்கை செய்ய கேபிஎம்ஜி நிறுவனத்தை அமர்த்தி உள்ளதாக தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஸோங்ஷி எண்டர்பிரைஸ் குரூப், படுமோசமான நிதி நெருக்கடியை எதிர்நோக்குகிறது.

தணிக்கைக்குப் பிறகு கடனைத் திருப்பி அடைக்கும் ஏற்பாடுகளைத் திருத்தி அமைக்கவும் சொத்துகளை விற்கவும் நிறுவனம் திட்டமிடுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

ஸோங்ஷி எண்டர்பிரைஸ், 1 டிரில்லியன் யுவானுக்கும் (S$188 பில்லியன்) அதிக மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்