இளைர்களின் வேலையின்மை விகிதத்தை வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளது, இது நாட்டின் மந்தநிலையின் முக்கிய அறிகுறியாக சிலரால் பார்க்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளியலான சீனாவிலும் அதன் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜூன் மாதத்தில், நகர்ப்பகுதிகளில் 16 முதல் 24 வயதுடையவர்களிடையே வேலையின்மை விகிதம் 21.3%க்கு உயர்ந்தது.
நாட்டின் மத்திய வங்கியும் செவ்வாயன்று வளர்ச்சியை அதிகரிக்க உதவும் முயற்சியில் கடன் வாங்கும் செலவைக் குறைத்தது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி சீனாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 5.3% ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் இளையர்களின் வேலையின்மை குறித்த தரவை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசாங்கம் கூறியது. எனினும் எவ்வளவு காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று அது கூறவில்லை.
“இளையர்கள் மற்றும் பிற வயதினருக்கான” பொது வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்களைத் திரட்டுவதை அரசாங்கம் நிறுத்தும் என்று தேசிய புள்ளிவிவரத் துறையில் செய்தித் தொடர்பாளர் திரு ஃபூ லிங்ஹுய் கூறினார்.
அரசாங்க ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஆய்வு முறைகள் “மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்” என்றா அவர்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவின் இளையரின் வேலையின்மை விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
வேலை தேடுவதற்கான இளையர்களின் இடைவிடாத போராட்டம், உலகின் இரண்டாவது பெரிய பொருளியலான சீனப் பொருளியல் குறித்த கவலையின் மற்றொரு அறிகுறியாகும்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட பொருளியல் அறிக்கையில் பல அம்சங்கள் கவலையளிப்பதாக உள்ளன. ஜூலை மாத சில்லறை விற்பனை, தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி போன்றவை எதிர்பார்த்தைவிடக் குறைந்து உள்ளது. சொத்துச் சந்தை மேம்பாட்டு முதலீடுகள் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 8.5% சரிந்துள்ளன.

