ஷங்ஹாய்: தைவானைச் சுற்றி சீனா சனிக்கிழமையன்று போர்ப் பயிற்சிகளை நடத்தியது.
பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக இப்போர்ப் பயிற்சிகள் ஓர் எச்சரிக்கையாக அமைகிறது என்று சீனா கூறியது.
அதுமட்டுமல்லாது, தைவானிய துணை அதிபர் வில்லியம் லாய் அமெரிக்காவிலிருந்து வெள்ளிக்கிழமையன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் திரு லாய் உரையாற்றினார்.
திரு லாயின் அமெரிக்கப் பயணம் சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் இப்போர்ப் பயிற்சிகள் அமைந்தன.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் தைவானை ஆட்சி செய்கிறது. அது தன்னை ஒரு தனி நாடாகக் கருதுகிறது.
ஆனால் தைவானைத் தனது மாநிலங்களில் ஒன்றாக சீனா கருதுகிறது.