மாஸ்கோ: ரஷ்யாவின் குர்க்ஸ் நகரத்தில் உள்ள ரயில் நிலையம் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியதாகவும் அதன் காரணமாக ஐவர் காயம் அடைந்ததாகவும் குர்க்ஸ் நகரத்தின் ஆளுநர் திரு ரோமன் ஸ்டாரோவ்யோட் தெரிவித்தார்.
அந்த ரஷ்ய நகரம் மீது உக்ரேன் ஆளில்லா வானூர்தி பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.
அந்த ஆளில்லா வானூர்தி ரயில் நிலையத்தின் கூரை மேல் விழுந்ததாகவும் அதையடுத்து, கூரை தீப்பிடித்து எரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணாடித் துண்டுகள் சிதறியதில் ஐந்து பேர் காயமுற்றதாக அறியப்படுகிறது.
உக்ரேனிய எல்லையிலிருந்து குர்க்ஸ் நகரம் ஏறத்தாழ 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ரஷ்யத் தலைநகரம் மாஸ்கோவை நோக்கி ஆளில்லா வானூர்தியைச் செலுத்த உக்ரேன் முயற்சி செய்ததாகவும் மாஸ்கோவின் மேயர் செர்கேய் சொப்யானின் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.

