கபுன் சான் லுகாஸ்: ஹிலரி புயல் காரணமாக மெக்சிகோவின் பாஜா தீபகற்பத்திலும் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியிலும் கனமழை பெய்தது.
ஹிலரி புயல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாக அமையக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் பிரிவு 4லிருந்து 2க்குக் குறைந்தள்ளபோதிலும் அதன் காரணமாக பெரும் சேதம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் ஹிலரி புயல் பாஜா கலிஃபோர்னியா கடலோரப் பகுதியில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

