இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி அருகில் வெடிகுண்டு வெடித்ததில் 11 தொழிலாளர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தில் அந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்,
பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான சாவடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்ததாகவும் அங்கு வேலை செய்ய அந்தத் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் அப்பாவி தொழிலாளர்களின் உயிரைப் பறித்திருப்பதாகக் குறிப்பிட்ட பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வர் உல் ஹக் ககர், அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.