ஸாஹிட்: தேசிய தினச் சின்னம், கருப்பொருளை அரசியலாக்காதீர்

ஸாஹிட்: தேசிய தினச் சின்னம், கருப்பொருளை அரசியலாக்காதீர்

1 mins read
47ffbab2-622f-4806-a4cb-35c78b224e50
அகமது ஸாஹிட் ஹமிடி - படம்: பெரித்தா ஹரியான்

புத்ராஜெயா: தேசிய தினச் சின்னம், கருப்பொருள் ஆகியவை தொடர்பான விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று மலேசியத் துணைப் பிரதமர் டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்கள் வேறு தேசிய தினச் சின்னம், கருப்பொருளைப் பயன்படுத்தும் என்று அதன் இளையரணித் தலைவர் அகமது ஃபட்லி ஷாரி கூறியது முன்னேற்றப் பாதைக்கு முரணானது என்றார் டாக்டர் ஸாஹிட்.

“இது அரசியல் தொடர்பானதல்ல. இது நாட்டின் கொடி, தேசிய தினக் கொண்டாட்டத்தைப் பற்றியது. இதை அரசியலாக்கக்கூடாது,” என்றார் டாக்டர் ஸாஹிட்.

பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களைப் பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சி செய்கிறது.

குறிப்புச் சொற்கள்