‘பொறுப்பற்ற’ உயர் அதிகாரிகளைச் சாடிய கிம் ஜோங் உன்

‘பொறுப்பற்ற’ உயர் அதிகாரிகளைச் சாடிய கிம் ஜோங் உன்

1 mins read
b4232573-2d08-41d3-8f0f-5e56bae6555c
வெள்ளம் ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் பேசிய வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

பியோங்யாங்: வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முறையாகச் செயல்படவில்லை என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சாடியுள்ளார்.

அவர்களைப் ‘பொறுப்பற்ற’ அதிகாரிகள் என்று அவர் வர்ணித்துள்ளார்.

நாட்டின் பொருளியலை அவர்கள் சீரழித்துவிட்டதாக திரு கிம் குறைகூறினார்.

கடலோரம் இருந்த வயல்களில் வெள்ள நீர் புகுந்து சேதம் விளைவித்தது.

அந்த இடத்தைத் திரு கிம் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடிகால் கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாததால் அவ்விடத்தில் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் வெறும் பார்வையாளர்களைப் போல நடந்துகொண்டதாகத் திரு கிம் கடிந்துகொண்டார்.

இதில் அமைச்சரவையில் இடம்பெறும் திரு கிம் டோக் ஹன் என்பவரைத் திரு கிம் ஜோங் உன் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காலமாக திரு கிம் டோக் ஹனின் தலைமையின்கீழ் செயல்படும் பிரிவின் செயல்பாடு மோசமடைந்து வருவதாகவும் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகவும் திரு கிம் ஜோங் உன் அதிருப்தி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்