மலேசியா: நிர்ணயித்த விலையைவிடக் குறைவாக கோழி இறைச்சி விற்பனை

மலேசியா: நிர்ணயித்த விலையைவிடக் குறைவாக கோழி இறைச்சி விற்பனை

1 mins read
dd637178-6d16-4572-8185-46f43272f28b
பினாங்கின் ஜார்ஜ்டவுன் பகுதியில் உள்ள சந்தையில் கோழி இறைச்சி விற்பனையாளர் ஒருவர். - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்: மலேசியாவில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையைவிடக் குறைவாக, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை விநியோகிப்பாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை கிட்டத்தட்ட 60 காசு ($0.17) குறைந்திருப்பதாக சிலாங்கூரில் உள்ள விநியோகிப்பாளர் ஒருவர் கூறினார்.

“லாபம் ஈட்டுவதற்காக, விலையைக் குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுகிறோம்,” என்றார் அவர்.

கோழி இறைச்சிக்கான தேவை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விநியோகிப்பாளர்கள் விலையைக் குறைக்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

விநியோகம் அதிகரித்து, தேவை குறைந்தால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விநியோகிப்பாளர்கள் விலையைக் குறைப்பர் என்று மலேசிய கால்நடைப் பண்ணையாளர்கள் சங்கம் கூறியது.

இருப்பினும், பேராக், பினாங்கு போன்ற இடங்களில் கோழி இறைச்சி இன்னும்கூட அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையைவிட அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோழி இறைச்சியின் விலை உயர்வதற்கு தளவாடவியல் போன்ற அம்சங்கள் இருக்கலாம் என்றும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்