ஆக்லாந்து வெள்ள நிவாரத்துக்கு குறைந்தது $524 மில்லியன்

ஆக்லாந்து வெள்ள நிவாரத்துக்கு குறைந்தது $524 மில்லியன்

1 mins read
ceadd16f-25bc-4c85-81a2-0262218ce5df
கடந்த ஜனவரி மாதம் ஆக்லாந்தில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. - படம்: தமிழ் முரசு

வெலிங்டன்: கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அதன் உள்கட்டமைப்பு சீர்குலைந்தது.

சில வீடுகள் மிகக் கடுமையாகச் சேதமடைந்தன.

இந்நிலையில், ஆக்லாந்தை மறுசீரமைக்க குறைந்தது 877 மில்லியன் நியூசிலாந்து டாலர் ($524 மில்லியன்) நிதி ஒதுக்கப்படும் என்று நியூசிலாந்து அரசாங்கம் வியாழக்கிழமையன்று அறிவித்தது.

1.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆக்லாந்தைக் கடந்த ஜனவரி மாதம் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் உலுக்கின.

அதில் நான்கு பேர் மாண்டனர்.

சாலைகளும் வீடுகளும் சேதமடைந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்