கென்பரா: மிகக் கடுமையான பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலகளாவிய நடவடிக்கை எடுக்க தவறினால் ஆஸ்திரேலியாவுக்குக் கிட்டத்தட்ட 423 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$370 பில்லியன்) பொருளியல் இழப்பு ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் மூப்படையும் மக்கள்தொகையுடன் இந்தச் சவாலையும் ஆஸ்திரேலியா எதிர்கொள்ள வேண்டிவரும் என்று கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக, உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு 3 டிகிரி செல்சியசுக்கும் அதிகமானால் ஆஸ்திரேலியாவின் உற்பத்தித்திறன் 0.2 விழுக்காட்டிலிருந்து 0.8 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது.