தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியரசுக் கட்சி விவாதத்தில் விவேக் ராமசாமியை முடக்க முயற்சி

2 mins read
65674812-6e8f-498e-86d7-67dec8455e3e
38 வயது தொழில்முனைவரான விவேக் ராமசாமி, குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயல்கிறார். - படம்: என்டிடிவி

மில்வாக்கி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதம், புதன்கிழமை இரவு விஸ்கான்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் நடைபெற்றது.

அந்த விவாதத்தில் கலந்துகொண்ட எட்டுப் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது தொழில்முனைவரான விவேக் ராமசாமியும் அடங்குவார்.

நார்த் டகோட்டா மாநில ஆளுநர் டக் பஹ்கம், நியூ ஜெர்சி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, ஃபுளோரிடா மாநில ஆளுநர் ரோன் டிசான்டிஸ், ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான முன்னாள் தூதர் நிக்கி ஹேலி, அர்கன்சாஸ் மாநில முன்னாள் ஆளுநர் அசா ஹட்சின்சன், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், சவுத் கேரலினா மாநில செனட்டர் டிம் ஸ்காட் ஆகியோரும் கலந்துகொண்ட அந்த விவாதத்தில் விவேக் ராமசாமி அதிகக் கவனம் ஈர்த்தார்.

திரு மைக் பென்ஸ், விவேக் ராமசாமி அனுபவமற்றவர் எனும் பொருள்பட ‘ரூக்கி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அனுபவமற்றவர்களை அதிபராக்கி வேலையில் பயிற்சி தருவதற்கு நேரமில்லை என்றார் அவர்.

தயாரிக்கப்பட்ட முழக்கவரிகள் முடிந்துவிட்டன என்றால் உண்மையான விவாதத்தைத் தொடங்கலாம் என்று அவருக்குப் பதிலடி கொடுத்தார் விவேக்.

விவேக்கின் பதில்கள் எல்லாம் ‘சாட்ஜிபிடி’ மூலம் பெறப்பட்டதுபோலத் தோன்றுகிறது என்று கூறினார் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி. ஆனால் கிறிஸ் கிறிஸ்டி திரு டிரம்ப்மீதான வஞ்சம், மனத்தாங்கலை அடிப்படையாகக்கொண்ட பிரசாரத்தை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார் விவேக்.

அண்மைய கருத்துக் கணிப்பில் திரு டிரம்ப்பிற்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் உள்ளார் விவேக் ராமசாமி. மற்ற போட்டியாளர்கள் அவரது புகழைக் குறைக்க முயன்றதுபோல் அந்த விவாதம் அமைந்ததாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்