பனாமா கால்வாயில் மோசமான கப்பல் போக்குவரத்து நெரிசல்

பனாமா கால்வாயில் மோசமான கப்பல் போக்குவரத்து நெரிசல்

1 mins read
ecb4e487-8d49-400c-acda-fcfcdb77920e
பனாமா கால்வாயைக் கடக்க முடியாமல் 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பனாமா சிட்டி: உலகிலேயே ஆக அதிகமான கப்பல்கள் பயன்படுத்தும் கடல்பாதைகளில் பனாமா கால்வாயும் ஒன்று.

இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக பனாமாவில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பனாமா கால்வாயில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

எனவே, போதுமான ஆழம் இல்லாத காரணத்தால் அவ்விடத்தை அடைந்திருக்கும் கப்பல்களால் அந்தக் கால்வாயைக் கடக்க முடியவில்லை.

பனாமா கால்வாய்க்கு இரு பக்கங்களிலும் 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கப்பல்களில் சில கடந்த சில வாரங்களாக எங்கும் போக முடியாமல் அங்கேயே சிக்கித் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“பனாமாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரையே பனாமா கால்வாய் அதிகம் நம்பியிருக்கிறது. ஆனால் மழையின் அளவு குறைந்திருப்பதால் கால்வாயில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. போதுமான ஆழம் இல்லாததால் கப்பல்களால் கால்வாயைக் கடந்து செல்ல முடியவில்லை,” என்று முன்னாள் தனியார் புலன்விசாரணை நிபுணர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக இந்தியாவின் என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையே, பெரிய, கனமான கப்பல்களுக்கு கூடுதல் வரியை பனமா கால்வாய் ஆணையம் விதித்துள்ளது.

இதன் காரணமாக விநியோகத் தடையும் விலை ஏற்றமும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கப்பல்களின் பயணம் தடைப்பட்டுள்ளதை புளூம்பர்க் உறுதி செய்துள்ளது.

கால்வாயில் நீர்மட்டம் குறைந்திருப்பதால் கப்பல்களால் எதிர்பார்த்த அளவுக்கு அதிக சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கப்பல்

தொடர்புடைய செய்திகள்