தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டுத் தீ அபாயங்களுக்கு ஆயத்தமாகும் ஆஸ்திரேலியா

1 mins read
29014178-45b1-4ac5-b27f-e610f4f5df5a
செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ சம்பவங்கள் நிகழும் அபாயம் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. - படம்: இபிஏ

சிட்னி: செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆஸ்திரேலியாவில் வசந்தகாலம்.

இவ்வாண்டு, இம்மாதங்களில் பல இடங்களில் காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்குத் தயாராகும்படி அந்நாட்டு வர்த்தகங்கள், சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநிலம், குவீன்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தென் ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் பெரிய நிலப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வெப்பநிலை அதிகரிப்பு, மழையின் அளவு குறைந்திருப்பது, அதிக அளவிலான எரிபொருள் பயன்பாடு, பருவநிலை மாற்றம் ஆகியவை இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீ

தொடர்புடைய செய்திகள்