வியட்னாமில் கரிமச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நால்வர் மரணம்

1 mins read
d03bc02b-86cf-47f5-943d-2381f5156416
மாண்ட நால்வரும் சுரங்க ஊழியர்கள். - படம்: தமிழ் முரசு

ஹனோய்: வியட்னாமில் கரமச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் நால்வர் மாண்டனர்.

இச்சம்பவம் குவாங் நின் மாநிலத்தில் நிகழ்ந்ததாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான தான் நியென் நாளிதழ் தெரிவித்தது. குவான் நின், சுரங்கப் பணிகளுக்கான வியட்னாமின் மையப் பகுதி.

சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. இடிந்து விழுந்த சுரங்கத்தை வாங் டான் கோல் கம்பெனி எனும் சுரங்க நிறுவனம் கவனித்து வந்தது. அந்நிறுவனம் வியட்னாமிய அரசாங்கத்தின் வினாகொமின் கரிமச் சுரங்க நிறுவனத்தின் ஒரு பிரிவு.

மாண்ட நான்கு சுரங்க ஊழியர்களின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக தான் நியென் நாளிதழ் தெரிவித்தது. இந்த அசம்பாவிதத்துக்கான காரணத்தை அது தெரியப்படுத்தவில்லை.

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் வான் டான் இயக்கிய கரிமச் சுரங்கத்தில் நேர்ந்தது. அதில் யாரும் உயிரிழக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்