கிரைமியா: ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரைமியா பகுதிக்கு அருகில் ரஷ்ய ஆகாயத் தற்காப்புப் படைகள் உக்ரேனின் இரண்டு ஆளில்லா வானூர்திகளைத் தாக்கியதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்த வட்டாரத்தின் தலைவர் செர்கே அக்சியோனோவ் டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளார்.
வானூர்திகளில் ஒன்று கருங்கடல் தீபகற்பத்தின் வடக்கில் விழுந்ததாகவும், மற்றொன்று மேற்கில் விழுந்ததாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே ரோபோடைன் பகுதியைத் தனது படைகள் ரஷ்யாவின் பிடியிலிருந்து விடுவித்துள்ளதாகவும், ரஷ்யப் படைகளுக்கு எதிரான தனது தாக்குதலை தெற்குப் பகுதிகளில் நடத்தவிருப்பதாகவும் உக்ரேன் கூறியுள்ளது.
“ரோபோடைன் ரஷ்யாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது”, என்று தற்காப்புத் துணை அமைச்சர் ஹானா மாலியர் கூறியதாக உக்ரேன் ராணுவம் தெரிவித்தது.
தனது படைகள் தேசியக் கொடியை ரோபோடைன் பகுதியில் ஏற்றியிருப்பதாக உக்ரேன் ராணுவம் சென்ற வாரம் கூறியிருந்தது.

