ஹுன் சென்னின் ஃபேஸ்புக் கணக்கிற்குத் தடை விதிக்க மெட்டா மறுப்பு

1 mins read
629e5c6c-7c03-47f1-bdf2-03e8d2af2f16
முன்னாள் கம்போடியப் பிரதமர் ஹுன் சென். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னின் ஃபேஸ்புக் பக்கத்த்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது.

மெட்டா, ஃபேஸ்புக் சமூக ஊடகத்தின் உரிமையாளர் நிறுவனம். திரு ஹுன் சென்னின் பக்கத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்குமாறு அந்நிறுவனத்தின் ஆலோசனைக் குழு பரிந்துரைத்ததை மெட்டா ஏற்க மறுத்தது.

ஆலோசனைக் குழு மெட்டா வழங்கும் நிதியுதவியில் இயங்குகிறது. எனினும், அக்குழு சுயேச்சையாகச் செயல்படுகிறது.

வன்முறை கொண்ட மிரட்டல்கள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளை மீறும் ஒரு காணொளி தொடர்பில் திரு ஹுன் சென்னின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஆறு மாதத் தடை விதிக்குமாறு மெட்டாவின் ஆலோசனைக் குழு இவ்வாண்டு ஜூன் மாதம் ஆலோசனை வழங்கியது.

அந்தக் காணொளியை அகற்ற மெட்டா ஒப்புக்கொண்டது. அதேவேளை பரிசீலனை செய்த பிறகு ஹுன் சென்னின் ஃபேஸ்புக் பக்கத்துக்குத் தடை விதிக்குமாறு ஆலோசனைக் குழுவின் பரிந்துரை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் மெட்டா குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்