தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நண்பரின் திருமணத்தில் 100,000 ரிங்கிட் பூச்செண்டுகளைக் கொடுத்து அசத்தல்

1 mins read
d2706299-e08b-480a-a38a-07e47991723f
மேடையில் கண்ணீர் மல்க நின்ற மணமகன் நிக்கோ, அயிசரை (இடது) கட்டியணைத்தார். - படம்: இன்ஸ்டகிராம்/அயிசர் காலித்

கோலாலம்பூர்: நட்புக்கு விலை கொடுக்க முடியாது என்பார்கள்.

ஆனால், நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமணத்தில் 100,000 மலேசிய ரிங்கிட் ரொக்கத்தால் ஆன பூச்செண்டுகளைக் கொடுத்து நண்பரை திக்குமுக்காடச் செய்தார் ஊடகப் படைப்பாளர் ஒருவர்.

தன் நண்பரின் அசைக்கமுடியாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விலையுயர்ந்த பரிசை திரு அயிசர் காலித் வழங்கினார்.

“என் வாழ்வின் மகிழ்ச்சியான நேரங்களிலும் சிக்கலான காலகட்டத்திலும் என்னுடன் இருந்ததற்கு மிக்க நன்றி. இதைப் பெற நீங்கள் தகுதிபெற்றவர், என் நண்பரே,” என்று கூறிய திரு அயிசரை இன்ஸ்டகிராமில் 650,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

“நீங்கள் எல்லா நேரங்களிலும் என்னுடன் இருந்ததற்கு 100,000 ரிங்கிட் ஒன்றுமே கிடையாது,” என்றும் அவர் சொன்னார்.

தமது மஞ்சள் நிற ‘லம்போர்கினி’ காரிலிருந்து ரொக்கத்தால் ஆன பூச்செண்டுகளை எடுத்துக்கொண்டு அயிசர் மணமேடையை நோக்கி நடப்பது காணொளியில் தெரிந்தது. பூச்செண்டுகளைப் பிடித்துக்கொள்ள ஆடவர்கள் சிலர் அவருக்கு உதவினர்.

அயிசரின் அன்பளிப்பைக் கண்ட புதுமணத் தம்பதி ஆச்சரியத்தில் மூழ்கினர். மேடையில் கண்ணீர் மல்க நின்ற மணமகன் நிக்கோ, அயிசரைக் கட்டியணைத்தார்.

அயிசருக்கும் நிக்கோவுக்கும் இடையிலான ஆழமான நட்பை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்