நியூயார்க்: அமெரிக்க-சீன ராணுவ அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் பிஜியில் நடந்த தற்காப்புத் துறை தலைவர்கள் மாநாட்டில் சந்தித்தனர்.
அந்தச் சந்திப்பு, அந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் இடம்பெற்ற அரிய, நேரடி சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. பிஜியில் அந்த மாநாடு ஆகஸ்ட் 14 முதல் 16 வரை நடந்தது.
அமெரிக்க இந்தோ பசிபிக் தளபத்தியத்திற்குத் தலைமை தாங்கும் அட்மிரல் ஜான் அக்யூலினோ, அந்த நிகழ்ச்சியில் சீனாவைச் சேர்ந்த மூத்த அதிகாரியைச் சந்தித்ததாக அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
சீனாவின் ராணுவத் துணை தலைமைத் தளபதியான ஜெனரல் ஸு சிலிங், பிஜியில் அமெரிக்கப் பிரதிநிதியைச் சந்தித்ததாக சீனத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஊ சியான் கூறினார்.
பேச்சு பற்றி எந்த தரப்பும் எதையும் தெரிவிக்கவில்லை.

