இந்தோனீசியா: எதிர்த்தரப்பு வேட்பாளர் ஜோடி உறுதியானது

இந்தோனீசியா: எதிர்த்தரப்பு வேட்பாளர் ஜோடி உறுதியானது

1 mins read
43797394-3353-4c60-8431-2843ee914ab4
இந்தோனீசியாவில் 2024 பிப்ரவரியில் நடக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அனிஸ் பாஸ்வெடன், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிநாட்டு ஊடகத்திடம் பேசினார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 2024 பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடக்கிறது. அதில் எதிர்த்தரப்பு அதிபர் வேட்பாளராக அனிஸ் பாஸ்வெடன் போட்டியிடுகிறார்,

அவருடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்குப் போட்டிபோடப் போவதாக பிகேபி என்ற கட்சியின் தலைவரான முஹைதீன் இஸ்கந்தர் 54, தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை உறுதியாகி உள்ள முதல் ஜோடி வேட்பாளர்கள் இவர்கள்தான்.

தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ,71, மத்திய ஜாவா ஆளுநர் காஞ்சார் பிரனோவோ, 54, இருவரும் துணை அதிபர் பதவிக்குப் போட்டிபோடக் கூடிய தங்கள் துணை வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்தோனீசியாவின் இப்போதைய அதிபரான ஜோகோ விடோடோ இனிமேலும் போட்டிபோட அரசமைப்புச் சட்டம் இடம்தராது.

அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் அனைவருமே நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 20% இடங்களைக் கொண்டு இருக்கின்ற அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆதரவைப் பெற்று இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்