பிலிப்பீன்சில் அரிசி விலைக்கு உச்சவரம்பு

1 mins read
310f0982-158a-441a-9b2a-fd0c165ef6df
பிலிப்பீன்சின் புலாகான் மாநிலத்தின் விளைநிலம். அங்கு விநியோகம் சீராக இருந்தபோதும் சட்டவிரோத விலைக் கையாளுதல்கள் காரணமாக கடந்த சில மாதங்களில் அரிசி விலை மிகவும் உயர்ந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

மணிலா: பயனீட்டாளரைப் பாதுகாக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் வெள்ளிக்கிழமையன்று அரிசிக்கான விலை உச்சவரம்பு விலையை அறிவித்துள்ளது.

அந்நாட்டின் தேசிய உணவான அரிசி விலை உயர்வு, ஆகஸ்ட் மாத பணவீக்கம் ஏழு மாதங்களில் முதல் முறையாக அதிகரிக்க காரணம்.

உலகில் ஆக அதிக அளவில் அரிசி இறக்குமதி செய்யும் தென்கிழக்கு ஆசியா, ரஷ்யா-உக்ரேன் மோதல், இந்தியாவின் ஏற்றுமதி தடை, கணிக்க முடியாத எண்ணெய் விலை போன்றவற்றின் அழுத்தம் அதிகரித்து வரும் நேரத்தில் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஒரு கிலோவிற்கு 41 பிலிப்பீன்ஸ் பெசோக்கள் (S$0.98) அதிகபட்ச விலையாக நிர்ணயிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில் தீட்டப்பட்ட அரிசியின் விலை ஒரு கிலோவிற்கு 45 பெசோவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

உள்ளூர் உற்பத்தி, இறக்குமதி செய்யப்பட்ட நன்கு தீட்டப்பட்ட அரிசி தற்போது தலைநகர் பகுதியில் 47 முதல் 56 பெசோ வரை விற்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை விவசாயிகள் குழு வரவேற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்