சிங்கப்பூர் வர ஜோகூரில் உள்ளோரின் சிரமம் தீர்க்க ‘குறுக்கு வழி’ யோசனை

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னதாக ஜோகூரில் கடப்பிதழ் சோதனைகளை விரைவாக முடித்துக்கொள்வதற்கு ஏதுவாக, நடந்து செல்வோருக்கு ‘குறுக்கு வழி’யை அல்லது குறைந்த தூரப் பாதையை மீண்டும் திறந்துவிடுவதற்கான சாத்தியம் குறித்து தீவிரமாக ஆராயப்படுவதாக மலேசிய உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணைக் குழுக் கூட்டம் ஒன்றுக்கு மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நாசுஷன் இஸ்மாயிலும்ம் ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸியும் தலைமை ஏற்றனர்.

கடற்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது தொடர்பான அம்சங்களைக் கவனிக்க இந்த இணைக் குழு ஏற்படுத்தப்பட்டது.

ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கச் சாவடி மற்றும் குடிநுழைவு வளாகம் ஆகியவற்றையும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியையும் இணைக்கும் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், இது குறித்து செவ்வாய்க்கிழமை இரவு திரு சைஃபுதின், செய்தியாளர்களிடம் பேசினார்.

“கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட அம்சங்களில் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிலைத் தீர்ப்பதற்கான சாத்தியம் முக்கியமானது.

“லாரிகள், பேருந்துகள், தனியார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நடந்து செல்வோருக்கான பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

“முக்கியமாக முன்வைக்கப்பட்ட குறுக்கு வழியை மீண்டும் திறப்பது குறித்த யோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்தது,” என்றார் அவர்.

இருப்பினும் இந்த யோசனை எப்போது நடப்புக்கு வரும் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

மலேசிய நாளிதழான த ஸ்டார் ஆகஸ்ட் 17ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஜோகூர் குடிநுழைவு வளாகத்திற்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள் போன்றோரை உள்ளடக்கிய ஏராளமானோர் குறுக்கு வழி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக அச்செய்தி குறிப்பிட்டது.

தற்போது கடப்பிதழ் சோதனைகளுக்காக 1.5 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக அந்த நாளிதழிடம் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, ஜாலான் லிங்காரன் டாலம் என்னும் இடத்தில் உள்ள ஹாக்கோ ஹோட்டல் அருகில் உள்ள குறுக்கு வழியைத் திறந்துவிடுமாறு அவர்கள் கேட்டிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!