காவல்துறை வாகனம்-ஸ்கூட்டர் மோதல்; பாரிசில் இளைஞர் மரணம்

காவல்துறை வாகனம்-ஸ்கூட்டர் மோதல்; பாரிசில் இளைஞர் மரணம்

படம்: ஏஎஃப்பி கோப்புப்படம்

07 Sep 2023 - 4:48 pm

1 mins read

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகருக்கு அருகே விலினஸ் என்ற இடத்தில் உள்ள இலன்கோர்ட்டில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த பதின்ம வயது இளைஞர் ஒருவரிடம் வாகனத்தை நிறுத்தும்படி காவல்துறை கூறியதாகவும் ஆனால், அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து அந்த ஆடவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரும் காவல்துறை காரும் மோதின. இந்தச் சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது.

அந்த இளைஞர் கடுமையாகக் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மரணமடைந்துவிட்டார்.

இதன் தொடர்பில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனமும் லி மோண்ட் என்ற செய்தி நிறுவனமும் தெரிவித்தன.

உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் போனது பற்றியும் வாகன ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறப்படுவது பற்றியும் இரண்டு புலன்விசாரணைகள் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாரிசில் சாலை சந்திப்பு ஒன்றில் கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியில் நாஹெல் என்ற 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து பிரான்சில் பல நாட்கள் கலவரங்களும் சூறையாடல்களும் நடந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்