தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடுப்புக் காவலில் கணவர் மரணம்; மனைவி விமலா தேவிக்கு 446,780 ரிங்கிட் இழப்பீடு

1 mins read
9592b36e-c432-486f-ae7d-7903c01beaae
விமலா தேவி கோரியிருந்த 446,780 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்க சிரம்பான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - கோப்புப் படம்

கோலாலம்பூர்: போர்ட் டிக்சன் காவல்துறை தலைமையகத்தில் உள்ள சிறையில் மரணம் அடைந்த 46 வயது சேகருக்கு இழப்பீடாக விமலா தேவி கோரியிருந்த 446,780 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்க சிரம்பான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மரணம் அடைந்த சேகரின் உடலை பிரேதேப் பரிசோதனை மேற்கொண்ட உடற்கூறு மருத்துவ நிபுணரின் சாட்சியத்தை அடிப்படையாகக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

சிறையில் இருந்தபோது அவரது உடலில் ஏற்பட்ட காயம்தான் சேகரின் மரணத்திற்கு காரணம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் இருக்கும் கைதியின் மரணத்திற்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார். மரணம் அடைந்த சேகர் அங்காடிக் கடை உதவியாளராக வேலை பார்த்தார். ஒரு குழந்தைக்குத் தாயான அவரது மனைவி வேலை செய்யவில்லை.

குறிப்புச் சொற்கள்