தோக்கியோ: ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஹோஷிமாசா ஹாயாஷி உக்ரேனிய தலைநகர் கியவ்வில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குலேபாவை சனிக்கிழமை சந்திக்கவிருந்ததாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அந்தச் சந்திப்பின்போது உக்ரேனுக்கு தன்னுடைய ஆதரவை ஜப்பான் மறுஉறுதிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானிய அமைச்சருடன் அந்த நாட்டின் நிறுவனங்களின் தலைவர்களும் உக்ரேன் சென்று இருக்கிறார்கள்.
ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, கடந்த மார்ச் மாதம் திடீரென உக்ரேன் சென்று கியவ் நகரில் உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்தார்.

