வாஷிங்டன்: தனக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரங்களை விண்வெளியில் உள்ள கருந்துளை உள்வாங்குவது வழக்கம்.
சில நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் முழுமையாக அது உள்ளே எடுத்துக்கொள்ளும். ஆனால் சில நட்சத்திரங்களை அது கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்குகிறது என்பது அண்மையில் தெரியவந்துள்ளது.
மிகப் பெரிய கருந்துளை ஒன்று அளவில் சூரியனைப் போல உள்ள நட்சத்திரம் ஒன்றைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்குவது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருந்துளைக்கு மிக அருகில் செல்லும்போதெல்லாம் அந்த நட்சத்திரத்தின் ஒரு பகுதியை அது விழுங்குவதாகக் கூறப்படுகிறது. இது பூமியின் எடையைவிட மூன்று மடங்கு அதிகம் என்று அறியப்படுகிறது.
கருந்துளைகளின் ஈர்ப்புச் சக்தி மிகவும் சக்திவாய்ந்தவை என்றும் ஒளியால்கூட அதனிடமிருந்து தப்ப முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

