தோக்கியோ: கிழக்கு ஆசியாவில் அண்மையில் புயல் வீசியது. அதனைத் தொடர்ந்து ஜப்பானின் சில பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்துவருகிறது.
அத்துடன், 100க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
தலைநகர் தோக்கியோவுக்கு அருகில் இருக்கும் மொபாரா மாநிலத்தில் சணிக்கிழமையன்று அதிக அளவு மழை பெய்தது.
அண்மையில் தைவானை ஹைக்குய் புயல் சூறையாடியது. அங்கு மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் வெள்ளம் கரைபுரண்டோடியது.
சீனாவின் தென் பகுதியில் உள்ள நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்தது. இதனால் பல முக்கிய நகரங்கள் முடங்கின.
தென்ஐரோப்பாவையும் கனமழை உலுக்கியது.
பருவநிலை மாற்றம் காரணமாக, உலகளவில் கனமழை பெய்யும் அபாயம் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.