நிரந்தர உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியம்

நிரந்தர உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியம்

1 mins read
71ee9120-eb47-4965-8110-9dddc16ba742
ஜி20 உச்சநிலை மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று கூறினார்.

ஜி20 உச்சநிலை மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது.

ஆப்பிரிக்க ஒன்றியம் 55 நாடுகளைக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இருக்கும் அதே அந்தஸ்தை அது கொண்டிருக்கிறது.

உச்சநிலை மாநாட்டின் வரவேற்பு உரையின்போது ஜி20 தலைவர்களுடன் வந்து அமருமாறு ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரான அஸாலி அசாவ்மானியைப் பிரதமர் மோடி வரவேற்றார்.

குறிப்புச் சொற்கள்