ஹாங்காங்: ஒரு வாரத்துக்கு முன்பு சக்திவாய்ந்த சவுலா புயல் ஹாங்காங்கை உலுக்கியது. அதையடுத்து, அங்கு தற்போது கனமழை பெய்துவருகிறது.
இதன் விளைவாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இதனால் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நகரப் பகுதி மூடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக ஹாங்காங்கின் வானிலை அதிக அளவில் மாறிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனமழை பெய்வது, புயல் வீசுவது மட்டுமன்றி வெப்பநிலையும் கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது.