ரஷ்யாவின் சு-30 ஆகாயப் படை விமானங்களைப் பெற்ற மியன்மார்

ரஷ்யாவின் சு-30 ஆகாயப் படை விமானங்களைப் பெற்ற மியன்மார்

1 mins read
2e7cd2f6-1d00-4d6b-8df1-278c8e3f5894
ஆறு சு-30எஸ்எம்இ ரக ஆகாயப் படை விமானங்களைப் பெற மியன்மார், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

நேப்பிடாவ்: மியன்மார், முதன்முறையாக ரஷ்யாவின் சு-30 ரக ஆகாயப் படை விமானங்களைப் பெற்றுள்ளது. மியன்மாரின் வர்த்தக அமைச்சர் சார்லி தான், ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஆர்ஐஏ செய்தி நிறுவனத்திடம் இதைத் தெரிவித்தார்.

முதல் இரண்டு சு-30 ஆகாயப் படை விமானங்கள் மியன்மாரைச் சென்றடைந்துள்ளதாக அவர் கூறியிருந்ததை ஆர்ஐஏ ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தது. கிழக்குப் பொருளியல் மாநாடு (ஈஸ்டர்ன் எக்கனாமிக் ஃபாரம்) நடைபெறும் வேளையில் தனிப்பட்ட முறையில் திரு தான் இத்தகவலை ஆர்ஐஏயிடம் கூறினார்.

வட்டார அளவில் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதும் ரஷ்யா ஆண்டுதோறும் நடத்திவரும் அந்த மாநாட்டின் நோக்கங்கள். ஞாயிற்றுக்கிழமையன்று விளாடிவொஸ்டொக் நகரில் மாநாட்டைத் தொடங்கத் திட்டமிடப்பட்டது.

ஆறு சு-30எஸ்எம்இ ரக ஆகாயப் படை விமானங்களை இறக்குமதி செய்ய மியன்மார், செப்டம்பர் மாதம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாக ஆர்ஐஏ குறிப்பிட்டது.

இதற்கிடையே, மியன்மார், ரஷ்யா இரண்டுக்கும் இடையே சுற்றுப்பயணத் துறையை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும் பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கிழக்குப் பொருளியல் மாநாட்டில் கையெழுத்தாகும் என்று திரு தான் தெரிவித்தார். இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு ரஷ்ய தற்காப்பு அமைச்சு பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்