மேற்கு பசிபிக்கில் சீனக் கப்பல்கள் பயிற்சி: தைவான்

மேற்கு பசிபிக்கில் சீனக் கப்பல்கள் பயிற்சி: தைவான்

1 mins read
709c5fe0-5cd7-46d1-bce1-4aa1d0a04e19
கடந்த ஏப்ரலில் தைவானைச் சுற்றி மேற்கு பசிபிக்கில் சீன ராணுவப் பயிற்சியில் ஷன்டோங் ஈடுபட்டது. - படம்: ஏஎஃப்பி

தைப்பே: விமானந்தாங்கிக் கப்பல் ஷன்டோங் உள்ளிட்ட சீனக் கப்பல்கள் திங்கட்கிழமை தைவானின் தென்கிழக்குப் பகுதி வழியாக 60 கடல் மைல் கடந்து பயிற்சிக்காக மேற்கு பசிபிக்கிற்குச் சென்றதாக தைவானிய தற்காப்பு அமைச்சு கூறியது.

தைவானின் ஆகாயத் தற்காப்பு அடையாளப் பகுதியில் காலை 5.40 மணி முதல், ஜே16 ரக போர் விமானங்கள் உட்பட 11 சீன ராணுவ விமானங்களை தான் கண்டதாக சொன்ன அமைச்சு, அதற்கேற்ற பதில் நடவடிக்கைகளை தான் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டது.

2019ல் தொடங்கப்பட்ட ஷன்டோங், கடந்த ஏப்ரலில் தைவானைச் சுற்றி மேற்கு பசிபிக்கில் சீன ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது.

குறிப்புச் சொற்கள்